என் மலர்
நீங்கள் தேடியது "ராகுல் காந்தி"
- வர்த்தக ஒப்பந்தத்தை விவசாயிகளுக்கு எதிரான துரோகமாக பார்க்கிறோம்- ராகுல் காந்தி
- பால்வளத் துறையை பலவீனப்படுத்தாமல், விரிவுபடுத்தியவர்கள் நாங்கள்தான்- அமித் ஷா
இந்தியா சமீபத்தில் ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலமாக இந்தியாவில் உள்ள விவசாயிகள், விவசாயம் பாதிக்கப்படும் என ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். அமெரிக்கா உடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை விவசாயிகளுக்கு எதிரான துரோகமாக பார்க்கிறோம் என்று எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி பொய் பரப்புகிறார். விவசாயிகள் முழுமையாக பாதுகாக்கப்படுகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-
விவசாயிகள் பாதுகாப்பு பற்றி பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி எடுத்த நிலையை பார்க்கும்போது எனக்கு சிரிக்கத்தான் தோன்றுகிறது. நாட்டை தவறாக வழி நடத்தியதற்கான நீண்ட கால வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. தற்போது அவர்கள் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பொய் பரப்பி வருகிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் கையெழுத்தான ஒவ்வொரு வர்த்தக ஒப்பந்தத்திலும், பிரதமர் மோடி உங்கள் நலன்களை முழுமையாகப் பாதுகாத்துள்ளார் என்பதை இந்த நாட்டின் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீனவர்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். கவலைப்படத் தேவையில்லை.
பால்வளத் துறையை பலவீனப்படுத்தாமல், விரிவுபடுத்தியவர்கள் நாங்கள்தான். அனைத்து ஒப்பந்தங்களிலும், பால்வளத் துறைக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி ஜி, எந்த மேடையை வேண்டுமானாலும் முடிவு செய்யுங்கள். பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவர் கூட வந்து விவசாயிகளுக்கு யார் தீங்கு செய்தார்கள், அவர்களின் நலனுக்காக யார் பாடுபட்டார்கள் என்பது குறித்து உங்களுடன் விவாதிக்க முடியும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
- நாடாளுமன்றத்தை சீர்குலைக்க ஒவ்வொரு நாளும் புதிய சாக்குப்போக்கு கண்டுபிடிக்கப்படுகிறது.
- இது அவர்களுடைய அடையாளமாக மாறிவிடும்.
பட்ஜெட் தொடர்பான முதல் கட்ட அமர்வு இன்றுடன் நிறைவடைந்தது. இரு அவைகளிலும் முன்னாள் தலைமை ராணுவ தளபதி எழுதியுள்ள புத்தகத்தில் சீனா குறித்த கருத்து இடம் பெற்றுள்ளதாக ராகுல் காந்தி பேச வந்த விவகாரம், இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பின. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பெரும்பாலான நாட்களில் அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் அவையை சீர்குலைக்க எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புதிய சாக்குப்போக்குகளை கண்டுபிடிக்கிறார் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சத்தியுள்ளார்.
இது தொடர்பாக தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தை சீர்குலைக்க ஒவ்வொரு நாளும் புதிய சாக்குப்போக்கு கண்டுபிடிக்கப்படுகிறது. இது நீண்ட காலத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பணியாக இருக்காது. அவர்களுடைய அடையாளமாக மாறிவிடும். ஒவ்வொரு செசனிலும் ஒரு ஸ்கிரிப்ட் காரணமாக கூச்சல் குழப்பம், பொய்கள், வேண்டுமென்றே பாராளுமன்ற விதிமுறைகள் மீறப்படுகின்றன.
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி கூட, பொறுப்பை விட குழப்பத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
பொய்களைப் பேசி, அவற்றையே திரும்பத் திரும்பச் சொல்லும் அரசியல் இனி அவருக்கு ஒரு பழக்கமாகவே இல்லை. அரசியல் அடையாளம். ராகுல் காந்தியை இந்திய அரசியலில் அவநம்பிக்கையின் அடையாளமாக மாற்றியுள்ளது. ராகுல் காந்தியும் காங்கிரசும் அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம், ஜனநாயக அமைப்பு, நாடாளுமன்ற நடைமுறைகள் அல்லது மக்களின் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல.
இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
- கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- ராகுல் காந்தி மக்களவையில் மேற்கோள் காட்டி பேசினார்.
ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே தனது புத்தகத்தில் கல்வான் தாக்குதலில் மத்திய அரசின் முடிவுகள் குறித்து எழுதிய விஷயங்கள் சர்ச்சை ஆனது.
இன்னும் வெளியிடப்படாத இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டி எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசியதால் அவையில் பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் புத்தகம் எழுதுவது குறித்து புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் அல்லது அதிகாரிகள் ராணுவம் தொடர்பான புத்தகங்களை எழுதுவதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சகத்திடம் முறையான முன்னனுமதி பெற வேண்டும்.
புதிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அல்லது அனுமதி பெறாமல் புத்தகம் எழுதினால், அவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் புதிய விதிகளில் வரையறை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் இது குறித்த தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- ராகுல்காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை
- ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யவேண்டும்.
இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கூட்டறிக்கை வெளியிடப்பட் டது. இதை சுட்டிக்காட்டி நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவை மத்திய அரசு விற்றுவிட்ட தாக குற்றம் சாட்டினார். இந்தியாவின் நலனில் மத்திய அரசு சமரசம் செய்ததாகவும் கூறினார். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. ராகுல்காந்தி தவறான தகவல்களை அளிப்பதாக பதிலடி கொடுத்தது. மேலும் அவருக்கு எதிராக மத்திய அரசு உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வரப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்திக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே நோட்டீஸ் அளித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை. கோரோஸ் அறக்கட்டளை, போர்டு அறக்கட்டளை மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் ஆகியவற்றுடன் அவர் எவ்வாறு தொடர்பு கொள்வார். தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், அமெரிக்கா போன்ற இடங்களுக்கு எவ்வாறு பயணம் செய்கிறார். ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளார் என்பதை குறிப்பிட்டு ஒரு முக்கிய தீர்மானத்தை நான் சமர்பித்துள்ளேன்.
அவரது எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றும், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் நான் கோரியுள்ளேன்." என நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.
- போராட்டத்திற்கு கேரள அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் முழு ஆதரவு.
- தொழிலாளர்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன் - ராகுல் காந்தி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் நடத்தி வருகிறது.
29 பழைய தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு நவம்பர் 2025-இல் அறிவிக்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், அணுசக்தி துறையை தனியாருக்கு திறந்து விடும் SHANTI சட்டம், மின்சாரத் திருத்த சட்டம், விவசாயிகளை பாதிக்கும் வரைவு விதை மசோதா ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும், வி.பி.ஜி ராம் ஜி சட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழையபடி அமல்படுத்த வேண்டும்.
அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும், விக்சித் பாரத் - கிராமின் மிஷன் 2025 சட்டத்தை ரத்து செய்து, இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
போராட்டத்திற்கு கேரள அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் முழு ஆதரவு அளித்துள்ளதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டத்திற்க்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று, நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
புதிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் தங்கள் உரிமைகளைப் பலவீனப்படுத்தும் என்று தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.
வர்த்தக ஒப்பந்தம் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
மேலும் MNREGA-வை பலவீனப்படுத்துவது அல்லது நீக்குவது கிராமங்களுக்கான கடைசி ஆதரவையும் பறித்துவிடும்.
அவர்களின் எதிர்காலம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டபோது, அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டன.
மோடிஜி இப்போது கேட்பாரா? அல்லது அவர் மீதான பிடி இன்னும் அதிகமாக உள்ளதா? தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- தரவு இந்தியாவில் இருக்கும் வகையில் தரவு மையங்களை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
- பிரதமர் மோடி எப்போதும் இந்தியாவின் நலனுக்காகவே பேசுவார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத்திற்கு பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
* வரி பகிர்வின் ஒரு பகுதியாக 2027 நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.25.44 லட்சம் கோடியை அரசு வழங்கும்
* 2026-27-ஆம் ஆண்டிற்கான மொத்த செலவு ரூ.53.47 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது
* நாட்டில் உரப் பற்றாக்குறை இல்லை; விவசாயிகளை ஆதரிக்க உர இறக்குமதிக்கு ரூ.1.71 லட்சம் கோடி பட்ஜெட் ஒதுக்கீடு
* அப்போது சிவசேனா (UBT) சரியான நேரத்தில் நிலம் வழங்கியிருந்தால், இந்தியாவில் புல்லட் ரயில் ஓடியிருக்கும்
* பாலுக்கு ஜிஎஸ்டி இருப்பதாக டிஎம்சி தலைவர் அபிஷேக் பானர்ஜி கூறுவது முற்றிலும் பொய்.
* மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தவில்லை, ஆனால் இரவில் பெண்களை வீட்டிற்குள் இருக்கச் சொல்கிறார்
* மேற்கு வங்கத்தில் சட்டம் அல்ல, குண்டுகள்தான் நிலவுகின்றன
* தரவு இந்தியாவில் இருக்கும் வகையில் தரவு மையங்களை அரசாங்கம் ஊக்குவிக்கிறது
* பிரதமர் மோடி எப்போதும் இந்தியாவின் நலனுக்காகவே பேசுவார்
* காங்கிரஸ் அரசு உலக வர்த்தக அமைப்பின் முன் சரணடைந்தது. ஏழைகளையும், விவசாயிகளையும் விற்றுவிட்டது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
- அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.
- சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 11) எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.
அமெரிக்கா - இந்தியா இடையே கடந்த வாரம் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவையில் ராகுல் காந்தி பேசியதாவது, "நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் எங்கள் தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிரதமர் பலனில்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.
ஒன்று அதானி மீதான அமெரிக்க வழக்கு, மற்றொன்று இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள 'எப்ஸ்டீன் கோப்புகள்'. 30 லட்சம் கோப்புகள் இன்னும் வெளியாகவில்லை, அதுவே பிரதமரின் பயத்திற்கு காரணம்.
அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார், அவர் ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை? காரணம், எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது.
அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஹர்தீப் புரியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும், ஹர்தீப் புரியிடமும் அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும்." என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி முன்வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
ராகுல் காந்தி பேசுவது கோமாளித்தனம் என்றும் 2014-2015 காலகட்டத்தில் தான் 'சர்வதேச அமைதி கழக' (International Peace Institute - IPI ) ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றியபோதுதான் எப்ஸ்டீனைச் சந்தித்ததாகவும் பூரி கூறினார்.
எப்ஸ்டீனை தான் ஒரு குழுவாகவே சந்தித்ததாகவும், அதிகபட்சமாக 3 அல்லது 4 முறை மட்டுமே அவரைச் சந்தித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், "2014-ஆம் ஆண்டு 'லிங்க்ட்இன்' நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் இந்தியா வருவது குறித்து எப்ஸ்டீனுடன் மின்னஞ்சல் பரிமாற்றம் நடந்தது. அந்த மின்னஞ்சலில், இந்தியாவின் இணையப் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து மட்டுமே பேசினேன்.
எப்ஸ்டீன் மற்றும் IPI தலைவர் டெர்ஜே ரோட்-லார்சன் ஆகியோர் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சலில், என்னை நேர்மையற்றவர் என்று குறிப்பிட்டிருப்பதை ராகுல் காந்தி படிக்க வேண்டும்.
அவர்களது சட்டவிரோதச் செயல்களுக்கு நான் ஒத்துழைக்காததால் தான் அவர்கள் என்னைப் பிடிக்காமல் அவ்வாறு கூறினார்கள்" என்று பூரி தெரிவித்தார்.
அண்மையில் அமெரிக்க நீதித்துறை சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது. இதில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் மோடி, அனில் அம்பானி, மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இதன் பின்ணனியிலேயே ராகுல் காந்தி இன்று மக்களவையில் பேசியுள்ளார்.
- இந்தியா- அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கம் பாரத மாதாவை விற்றுவிட்டது.
- விவசாயிகளின் நலன்கள் சமரசம் செய்யப்பட்டதன் மூலம் இது மொத்த சரணடைந்து விட்டது.
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பேசினார். அப்போது "இந்தியா- அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கம் பாரத மாதாவை விற்றுவிட்டது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு விவசாயிகளின் நலன்கள் சமரசம் செய்யப்பட்டதன் மூலம் இது மொத்த சரணடைந்து விட்டது" எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், இந்தியாவை விற்றுவிட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தி பேச்சு பொய்கள் நிறைந்தது. அதை நீக்கக்கோருவோம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறியதாவது:-
ராகுல் காந்தி பேச்சில் என்னென்ன பொய்கள் உள்ளனவோ, அவற்றை நீக்கக் கோருவோம். ராகுல் காந்தி பேசியது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கருத்துகள் என உறுதி செய்கிறார். அவரால் அங்கீகரிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால், அவர் பொய் பேசினார். அவர் அவையில் பொய் கூறினார்.
அவர் வேண்டுமென்றே பொய் பேசினார். பின்னர் அமைச்சர் பதிலை கேட்காமல், உடனடியாக அவையில் இருந்து வெளியேறினார்.
அவைக்கு வெளியில் ராகுல் காந்தி பொய்க்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். ஆனால் அவைக்கு உள்ளே, இது தொடர்பாக நோட்டீஸ் வழங்குவோம். சபாநாயகரிடம் தேவையான நோட்டீஸ் வழங்குவோம். பட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எந்தவொரு பயனுள்ள குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் செய்யவில்லை. ஆனால் சில காட்டுமிராண்டித்தனமான குற்றச்சாட்டுகளை மட்டுமே கூறினார்.
இந்தியாவை யாராலும் வாங்கவும், விற்கவும் முடியாது. இதுகுறித்து யாரும் நினைக்க வேண்டும். 2011-12-ல் இந்தியா ஐந்து பலவீனமான நாடுகளில் ஒன்றாக இருந்தது. தற்போது நாம் 4-வது பொருளாதார நாடாக வளர்ச்சி அடைந்துள்ளோம்.
இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
- அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.
- அவர்களுக்கு இந்தியர்களின் தரவு தேவை. அந்த வலிமையை இந்தியா பயன்படுத்தத் தவறிவிட்டது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 11) எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.
அமெரிக்கா - இந்தியா இடையே கடந்த வாரம் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவையில் ராகுல் காந்தி பேசியதாவது, "நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் எங்கள் தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிரதமர் பலனில்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.
ஒன்று அதானி மீதான அமெரிக்க வழக்கு, மற்றொன்று இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள 'எப்ஸ்டீன் கோப்புகள்'. 30 லட்சம் கோப்புகள் இன்னும் வெளியாகவில்லை, அதுவே பிரதமரின் பயத்திற்கு காரணம்.
அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார், அவர் ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை? காரணம், எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது.
அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஹர்தீப் புரியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும், ஹர்தீப் புரியிடமும் அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும்.
மத்திய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் டிஜிட்டல் வர்த்தக விதிகள் இந்தியாவின் 21-ஆம் நூற்றாண்டு எதிர்காலத்தை அடகு வைக்கிறது. இதன்மூலம் டிஜிட்டல் வர்த்தக விதிகளின் மீதான கட்டுப்பாட்டை இந்தியா இழந்துவிட்டது.
இந்தியர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஒப்பந்தம் மூலம் இந்தியர்களின் தரவுகள் தடையின்றி அமெரிக்காவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து அதன் மக்களின் தரவுகள் தான். அமெரிக்காவின் டாலரை பாதுகாக்க வேண்டுமானால், அவர்களுக்கு இந்தியர்களின் தரவு தேவை. அந்த வலிமையை இந்தியா பயன்படுத்தத் தவறிவிட்டது.
ஒரு வேலை இந்தியா கூட்டணி அமெரிக்காவுடன் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், பின்வரும் நிபந்தனைகளை முன்வைத்திருப்போம்:
டிரம்ப் அவர்களே, உங்கள் டாலரைப் பாதுகாக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் டாலரைப் பாதுகாப்பதற்கான மிகப்பெரிய சொத்து இந்திய மக்களிடம் உள்ள தரவுகள்.
எங்கள் மக்களின் தரவுகளை நீங்கள் பெற விரும்பினால், எங்களைச் சமமானவர்களாகக் கருதிப் பேசுங்கள். எங்களை உங்களது வேலையாட்களைப் போல நடத்தாதீர்கள்.
எங்கள் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எந்தச் சூழ்நிலையிலும் அதை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
உங்களுக்கு உங்கள் நாட்டு விவசயிகளின் வாக்குகள் வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்கள் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருப்பதைப் போலவே, எங்கள் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உண்டு.
இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் எங்களை ஒருபோதும் பாகிஸ்தானுடன் சமமாக வைத்துப் பார்க்காதீர்கள். நாங்கள் ஒரு தன்னாட்சி கொண்ட வல்லரசு என்பதை அங்கீகரித்து சமமாகப் பேசுங்கள் என்று கூறியிருப்போம்.
ஆனால் மத்திய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள புதிய டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தம், இந்தியர்களின் தரவுகளைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்துவிட்டது.
சீனாவுடனான போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுதம் நமது மக்களின் தரவுகள் தான். அதை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம் பிரதமர் மோடி இந்தியாவின் எதிர்காலத்தைச் சரணடையச் செய்துள்ளார்" என்று தெரிவித்தார்.
- பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் அசம்பாவித சம்பவத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
- இதனால் பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா கூறியிருந்தார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் பதிலளிக்க இருந்தபோது, சில காங்கிரஸ் பெண் எம்.பி-க்கள் பிரதமரின் இருக்கைக்கு அருகே சென்று ஒரு அசம்பாவித சம்பவத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், இத்தகைய சூழலில் நாட்டின் ஜனநாயக மரபுகள் சிதைக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று தாமே கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்த சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை மக்களவை செயலகத்தில் எதிர்க்கட்சிகள் வழங்கின.
இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை அரசியலில் இருந்து நீக்கும் நேரம் இது என பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் உணர்வுகளிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள்தான் இந்தியாவின் அனைத்து அரசியலமைப்பு பதவிகளையும் பதவி நீக்கம் செய்ய விரும்புகிறார்கள். ராகுல் காந்தியையும் காங்கிரசையும் அரசியலில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.
- மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க திட்டம் என சபாநாயகர் குற்றச்சாட்டு.
- ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசவில்லை.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது சீன விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசத் தொடங்கினார். இதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மக்களவையில் அவரை பேசவிடாமல் தடுத்தனர்.
இதற்கிடையே மக்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்கத் திட்டமிட்டிருந்தபோது, சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு "முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை" செய்யத் திட்டமிட்டிருந்ததாக தமக்குத் தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரைச் சபைக்கு வர வேண்டாம் என்று தாமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் மக்களவையில் பிரதமர் மோடி இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி கூறுகையில் "பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் மிரட்டல் என்ற கேள்விக்குகே இடமில்லை. உண்மை என்னவென்றால் மக்களவையில் நான் பேசியதை கண்டு பிரதமர் மோடி அவைக்கு வர பயந்தார்" என்றார்.
- பீகாரின் பூர்ணியா தொகுதியின் சுயேட்சை எம்.பி.யாக பப்பு யாதவ் உள்ளார்.
- பீகார் போலீசார் பப்பு யாதவை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
புதுடெல்லி:
பப்பு யாதவ் என்ற ராஜேஷ் ரஞ்சன், பீகார் மாநிலத்தின் பூர்ணியா தொகுதியின் சுயேட்சை மக்களவை உறுப்பினராக உள்ளார்.
பீகார் போலீசார் பப்பு யாதவை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர். 1995-ம் ஆண்டுக்கு முந்தைய ஒரு நிலத்தகராறு வழக்கு தொடர்பாக போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். பப்பு யாதவுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடந்தது.
இந்நிலையில், பப்பு யாதவ் கைதுக்கு காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்..
இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாட்னாவில் நீட் தேர்வு எழுதவிருந்த ஒரு மாணவி மர்மமான முறையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்ததும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும், இந்த ஆட்சியில் உள்ள ஆழமான சீரழிவை வெளிப்படுத்தியது. அந்த மகளுக்கு நீதி கோரி குரல் கொடுத்த பப்பு யாதவ் எம்.பி. கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது ஒரு அரசியல் பழிவாங்கல் செயல் என்பது தெளிவாகத் தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.






